Home
Mobile

சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo 5ஜி ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

தற்போது இந்திய சந்தையில் 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல்வேறு செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விவோ நிறுவனம் சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் Vivo Y56 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக தரமான சிப்செட், சிறந்த வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo 5ஜி ஸ்மார்ட்போன்.!

டிஸ்பிளே எப்படி?

அதாவது விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 × 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ Y56 5ஜி போன். ஆனால் இந்த
டிஸ்பிளேவுக்கு பதிலாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் Dimensity 700 சிப்செட். பின்பு FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo 5ஜி ஸ்மார்ட்போன்.!

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ 5ஜி போன். எனவே இந்த
ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo 5ஜி ஸ்மார்ட்போன்.!

விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் இந்த விவோ போன் குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது.

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய விவோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo 5ஜி ஸ்மார்ட்போன்.!

என்ன விலை?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y56 5G With 5000mAh battery Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X