மிரண்டு போவீங்க.. பட்ஜெட் கம்மி.. ஆனால், 6.5-இன்ச் டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக முதலில் இந்த போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய வேரியண்ட் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது விவோ Y56 5ஜி போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் கொண்ட விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் கொண்ட விவோ Y56 5ஜி மாடலின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த புதிய மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த விவோ Y56 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 × 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் Dimensity 700 சிப்செட். பின்பு FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் இந்த விவோ போன் குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது.
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய விவோ 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








