கம்மி விலை.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. அறிமுகமானது புது விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தொடர்ச்சியாக 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ ஒய்55டி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம்.
அதாவது இந்த விவோ ஒய்55டி (Vivo Y55t) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் விவோ ஒய்55டி போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன் ஆனது 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ( Full HD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 550 நிட்ஸ் ப்ரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வளைந்த டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC) வசதியுடன் இந்த அசத்தலான விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும். எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்ட இந்த விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.
15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

டூயல் சிம், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஓடிஜி சப்போர்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஒய்55டி ஸ்மார்ட்போன். கருப்பு, ஊதா, பச்சை மற்றும் நீல நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விவோ ஒய்55டி ஸ்மார்ட்போனின் ஆரம்பி விலை 999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.11,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








