6.51-இன்ச் டிஸ்பிளேவுடன் இந்தியாவில் விவோ Y54s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் புதிய விவோ Y54s ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y54s ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.19,800)ஆக உள்ளது. மேலும் ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்தசாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y54s ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,600×720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பெரிய டிஸ்பிளே வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் விவோ Y54s ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ 700 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ Y54s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். இதுதவிர கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த
அசத்தலான சாதனம்.

விவோ Y54s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், ஃபேஸ் ஐடி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y54s ஸ்மார்ட்போன் மாடல். மேலும் விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்லவரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications