64எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய விவோ Y53s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் கடந்த மாதம் விவோ Y53s 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக விவோ Y53s ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ Y53s 4ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
விவோ Y53s ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y53s ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா
இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
விவோ Y53s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,700-ஆக உள்ளது. பின்பு கருப்பு பச்சை மற்றும் ஊதா நிறங்களில் இந்த விவோ Y53s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications