Home
Mobile

ஆகஸ்ட் 9: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தனது புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில்
பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது விவோ Y53s ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆகஸ்ட் 9: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன்.!

விவோ Y53s ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ Y53s ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஆகஸ்ட் 9: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன்.!

இந்த விவோ Y53s ஸ்மார்ட்போனில் மீடியாடெக் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ Y53s ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் ரூ.19,490-விலையில் வெளிவரும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன்.!

விவோ Y53s சாதனத்தின் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்-க்கு பதிலாக ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு ஸ்னாப்டிராகன் சிப்செட் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இதைவிட சிறப்பான அம்சங்களுடன் ரூ.15000 விலையில் போக்கோ, சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y53s with 64 Mega Pixel Camera Launching in India on August 9: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X