Home
Mobile

ரூ.19,490-விலையில் அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இன்று முதல் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் 64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி,18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

விவோ Y53s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408×1080 பிக்சல்
தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி

இந்த புதிய விவோ Y53s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y53s

விவோ Y53s ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 64எம்பி பிரைமரி சென்சார்

விவோ Y53s ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்

விவோ Y53s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக Deep Sea Blue மற்றும் Fantastic Rainbow நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ Y53s ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0,

விவோ Y53s சாதனத்தில் டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y53s ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.19,490-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y53s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X