தரமான அம்சங்களுடன் விவோ Y52s (T1 Version) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் தனது புதிய விவோ y52s (t1 version) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ y52s (t1 version) ஸ்மார்ட்போன் மாடல்.

தரமான அம்சங்களுடன் விவோ Y52s (T1 Version)  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ y52s (t1 version) ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு Origin OS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ y52s (t1 version) சாதனம் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான அம்சங்களுடன் விவோ Y52s (T1 Version)  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ y52s (t1 version) ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

விவோ y52s (t1 version) ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ y52s (t1 version) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக Coral Sea, மோனட் மற்றும் டைட்டானியம் கிரே போன்ற நிறங்களில் இந்த விவோ y52s (t1 version) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் விவோ Y52s (T1 Version)  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ y52s (t1 version) மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.23,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y52s (T1 Version) Launched: Specs, Features and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X