அடுத்த அட்டகாச ஸ்மார்ட்போன்: 48எம்பி கேமராவுடன் விவோ ஒய்52 எஸ்: எப்போது அறிமுகம் தெரியுமா?

|

விவோ நிறுவனத்தின் அடுத்த ஒய் தொடர் ஸ்மார்ட்போனாக விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் எனவும் இதில் 720 ஜி எஸ்ஓசி செயலியுடன் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒய் தொடரில் புதிய ஸ்மார்ட்போன்

ஒய் தொடரில் புதிய ஸ்மார்ட்போன்

விவோ ஒய் தொடரில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஒய் தொடரில் புதிதாக ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் புதிய மாடல் ஸ்மார்ட்போன் சீனாவின் தொலைத் தொடர்பு பட்டியலில் காண்பிக்கப்படுகிறது.

அடுத்தவாரம் விவோ ஒய்52 எஸ்

அடுத்தவாரம் விவோ ஒய்52 எஸ்

இருப்பினும் ஒய்52 எஸ் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்தவாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்

டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் சீன டெலிகாம் பட்டியலில் வி207 எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என சீன டெலிகாம் வலைத்தளம் தெரிவிக்கிறது. வெளியிடும் தேதி குறித்த தகவல் கசியத் தொடங்கினாலும் விவோ நிறுவனம் இன்னும் விவரங்களை உறுதப்படுத்தவில்லை.

என்னமா இதெல்லாம்: பிரமிடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ- இன்ஸ்டாவில் குவியும் கமெண்ட்கள்!என்னமா இதெல்லாம்: பிரமிடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ- இன்ஸ்டாவில் குவியும் கமெண்ட்கள்!

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் விலை

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் விலை

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் 1,998 யுவானாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு சுமார் ரூ.22,543 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில் இது கடல்ப்ளூ, டைட்டானியம் க்ரே உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த புகைப்படத்தின்படி இதில் இரட்டை செல்பி கேமராக்கள், எல்இடி பிளாஷ் ஒன்று இருக்கும் என்பதை காண்பிக்கிறது.

மீடியாடெக் டைமன்ஷன் 720 செயலி

மீடியாடெக் டைமன்ஷன் 720 செயலி

விவோ ஒய்52 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்ஷன் 720 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஆக்டோ கோர் செயலி 5ஜி ஆதரவுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும் என கூறப்படுகிறது. மெமரி நீட்டிப்பு வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது.

6.58 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

6.58 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போனில் 6.58 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1080 x 2400 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே யு வடிவ அமைப்புடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இது இயங்கும் என கூறப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் குறித்த தகவல் தெரியவில்லை. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. அதோடு இதன் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y52S Smartphone May Launching on December 10 With 48Mp Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X