டூயல் கேமராவுடன் விவோ Y52s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
விவோ நிறுவனம் தனது விவோ Y52s ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான டிஸ்பிளே வசதி, சிறந்த கேமரா மற்றும் தரமான மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y52s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் டிஸ்பிளே வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம் மற்றும் 21:09 என்கிற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் MediaTek Dimensity 720 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y52s ஸ்மார்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
விவோY52s ஸ்மார்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் உள்ளது.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
விவோ Y52s ஸ்மார்;போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் Dual Engine பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை(இந்திய மதிப்பில்) ரூ.18,100. அதேபோல் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








