48எம்பி கேமராவுடன் அசத்தலான விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் தனது புதிய விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் விவோ Y52 5ஜி சாதனத்தின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை விவோ நிறுவனம். குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இப்போது விவோ Y52 5ஜி சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1080 X 2408 பிகசல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Dimensity 700 SoC சிப்செட்
விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Funtouch OS 11.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி bokeh லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த விவோ Y52 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, டூயல் சிம் 4ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.1, டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கிராஃபைட் பிளாக் மற்றும் ட்ரீம் க்ளோ நிறங்களில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








