Home
Mobile

Vivo Y51A: ட்ரிபிள் கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை என்ன?

விவோ நிறுவனம் விவோ ஒய் 51 ஏ (Vivo Y51A) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்புடன் பட்ஜெட் விலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மற்ற சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் (Vivo Y51A)

விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் (Vivo Y51A)

இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. விவோ ஒய் 51 ஏ பின்புறத்தில் முக்கோண வடிவத்தில் சென்சார்கள் உடன் கூடிய 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் ஒருங்கிணைந்த டிரிபிள் கேமரா அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. விவோ ஒய் 51 ஏ, கடந்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய் 51 (Vivo Y51) ஸ்மார்ட்போனின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் Vivo Y51A விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் Vivo Y51A விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் Vivo Y51A போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வேரியண்ட் ரூ. 17,990 என்ற விலையில் டைட்டானியம் சபையர் மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான் , பிளிப்கார்ட், பேடிஎம் , டாடாக்லிக் மற்றும் அனைத்து சில்லறை விற்பனையாளர் கடைகளிலும் இந்த புதிய விவோ ஒய் 51 ஏ வாங்குவதற்குக் கிடைக்கிறது.

விவோ ஒய் 51 விவரக்குறிப்புகள்

விவோ ஒய் 51 விவரக்குறிப்புகள்

  • 6.58' இன்ச் 1080 x 2408 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 11
  • ட்ரிபிள் கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
  • பேட்டரி
    • 2 மெகாபிக்சல் கூடுதல் சென்சார்
    • 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர்
    • டூயல் பேண்ட் வைஃபை
    • புளூடூத் 5.0
    • ஜி.பி.எஸ்
    • யூ.எஸ்.பி டைப்-சி
    • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • 5,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y51A Launched in India With Triple Rear Camera Setup : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X