Vivo Y51 அறிமுகம்: 48 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு- விலை என்ன தெரியுமா?
விவோ ஒய்51 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 1080 பிக்சல் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி 6ஐ, ரெட்மி நோட் 9 ப்ரோ, போகோ எக்ஸ் 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.

விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன்
விவோ அறிமுகம் செய்துள்ள புதிய ஒய் தொடர் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகபடுத்தப்பட்டது. விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன் ஒரே ரேம் விருப்பத்தில் கிடைக்கிறது. அது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.17,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒய்51 ஸ்மார்ட்போன் சலுகைகள்
விவோ ஒய்51 ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் சிம்பொனி மற்றும் டைட்டானியம் சேபையர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் ரூ.101 செலுத்தி பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் இஎம்ஐ விருப்பங்களில் வாங்கலாம். மேலும் ஐடிஎப்சி, எச்டிபி வங்கி கார்ட்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது.

ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதம்
விவோ ஒய்51 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.47 இன்ச் பிபி ஐவியூ டிஸ்ப்ளேவோடு 90 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதத்துடன் வருகிறது. விவோ ஒய்51 ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 600 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

பின்புறத்தில் கைரேகை சென்சார்
விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா
விவோ ஒய் 51 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா அமைப்பு இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
விவோ ஒய் 51 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜி வோல்ட்இ, டூயல் சிம் ஆதரவு மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications