விவோ ஒய்51 (2020) விரைவில் அறிமுகம்: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!
விவோ ஒய் 51 (2020) விரைவில் இந்தியாவில் அறிமுகப்படும் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

விவோ ஒய்51 (2020) அறிமுகம்
விவோ ஒய்51 (2020) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஒய் 51 (2020) இந்திய விலை
விவோ ஒய் 51 (2020) இந்திய விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்
விவோ ஒய் 51 (2020) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை மைஸ்மார்ட் பிரைம் முன்னதாக அறிவித்தது. ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை வெளியாகவில்லை. மேலும் அறிமுகம் செய்யப்படுமா என்பதையும் விவோ நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் விவோ ஒய் 51 (2020) விலை ரூ.20,000-த்துக்கு குறைவான விலையில் இருக்கும் என கூறப்படுகிறது.

6.38 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
விவோ ஒய் 51 (2020) அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.38 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1,080x2,340 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 செயலியில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இதில் இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர் என நான்கு கேமராக்கள் உள்ளது. அதோடு இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி
விவோ ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரியும், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.


Click it and Unblock the Notifications