ஸ்னாப்டிராகன் 720 சிப்செட் வசதியுடன் விவோ Y50t ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் புதிய விவோ Y50t ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்னாப்டிராகன் சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y50t ஸ்மார்ட்போனின் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,300) ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் கருப்பு,நீலம் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது விவோ Y50t ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y50t ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 19.5:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த விவோ Y50t ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y50t ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்கள்
மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே துல்லியமான
வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

விவோ Y50t ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இரட்டை சிம் (நானோ), 3.5mm ஆடியோ ஜாக், புளூடூத் v5.1, மைக்ரோ USB போர்ட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y50t ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது இந்தியாவில் 5ஜி
ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் விவோ, ஒப்போ, மோட்டோ போன்ற பல நிறுவனங்கள் தொடர்நது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications