பட்ஜெட் விலையில் 2026-க்கு பிள்ளையார் சுழி போட்ட VIVO.. 6000mAh பேட்டரி உடன் புதிய 5ஜி போன் அறிமுகம்!
பட்ஜெட் விலை பிரிவின் கீழ் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதன் மூலம் விவோ நிறுவனமானது 2026 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் அதன் ஒய்50 சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது.
அவைகள் விவோ ஒய்50எஸ் 5ஜி (Vivo Y50s 5G) மற்றும் விவோ ஒய்50இ 5ஜி (Vivo Y50e 5G) மாடல்கள் ஆகும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே - நீண்ட பேட்டரி லைஃப், நீடித்து உழைக்கும் வடிவமைப்பு மற்றும் தினசரி 5ஜி பெர்பார்மென்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

விவோ ஒய்50எஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்50இ 5ஜி அம்சங்கள்: இரண்டுமே ஒரே மாதிரியான வடிவமைப்பை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டுமே 1600 x 720 பிக்சல்ஸ் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் 6.74-இன்ச் பிளாட் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டு மாடல்களுமே ஐபி64 ரேட்டிங்கை பெற்றுள்ளன
இரண்டுமே ஒரே மாதிரியான 167.30 x 76.95 x 8.19மிமீ டிசைன் மற்றும் 204 கிராம் எடையை கொண்டுள்ளன மற்றும் இரண்டுமே டைமன்சிட்டி 6300 சிப்செடை மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு விவோ 5ஜி ஸ்மார்ட்போன்களுமே 6000mAh பேட்டரியை கொண்டு உள்ளன.
முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை விவோ ஒய்50இ 5ஜி மாடல் ஆனது 15W சார்ஜிங்கை ஆதரிக்கிறது, ஆனால் விவோ ஒய்50எஸ் 5ஜி மாடல் ஆனது 44W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. இருப்பினும் இரண்டு மாடல்களிலும் ஓடிஜி ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (OTG reverse charging support) உள்ளது.
விவோ ஒய்50இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது eMMC 5.1 ஐ பயன்படுத்தி 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதே நேரத்தில் விவோ ஒய்50எஸ் 5ஜி மாடல் ஆனது 6GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் சற்றே ஸ்பீட் ஆன UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை இரண்டுமே ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 5 உடன் வருகின்றன. கேமராக்களை பொறுத்தவரை 5எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளன. இது 1080p வரையிலான வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.
செக்யூரிட்டி அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் மற்றும் பேஸ் ரிகக்னைசேஷனை கொண்டுள்ளன. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை டூயல் சிம் ஆதரவு, 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, மல்டி-சிஸ்டம் ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-C, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், இன்ப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் ஆகியவைகளை கொண்டுள்ளன
விவோ ஒய்50எஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்50இ 5ஜி விலை விவரங்கள்: சீனாவில் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உடன் வரும் விவோ ஒய்50இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 19400 க்கும், விவோ ஒய்50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.23,400 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் ஒய் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதாலும், ஏற்கனவே பல ஒய் சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாலும், விவோ ஒய்50எஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்50இ 5ஜி ஆகிய இரண்டுமே நிச்சயம் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் கிடைத்தால், உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








