என்ன மாறி ஒரு வேலைப்பாடு.. 6000mAh பேட்டரி உடன் VIVO வின் புது 5ஜி போன்!
விவோ நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. 6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வேகத்தில், இன்னொரு 6500mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆன விவோ வி60இ 5ஜி (Vivo V60e 5G) இந்திய விலைகள் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தது; இதுவும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில் 6000mAh பேட்டரி கொண்ட இன்னொரு புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன் "சைலன்ட் ஆக" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது விவோ ஒய்50ஐ 5ஜி (Vivo Y50i 5G) ஸ்மார்ட்போன் ஆகும். விவோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்மூத் ஆன டிஸ்பிளே, ஈர்க்கக்கூடிய பெரிய பேட்டரி மற்றும் திறமையான சிப்செட்டை பேக் செய்கிறது.

விவோ ஒய்50ஐ 5ஜி முக்கிய அம்சங்கள்:
- எச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிசி டிம்மிங்
- கண் வசதிக்காக டார்க் மோட்
- 180ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- TÜV Rheinland லோ ப்ளூ லைட் சான்றிதழ்
- 6.74 இன்ச் எசிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC)
- 12 ஜிபி வரை ரேம்
- 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 13 எம்பி ரியர் கேமராவை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டப்
- 5 எம்பி செல்பீ கேமரா
- 15W சார்ஜிங் ஆதரவு
- 6,000mAh பேட்டரி
- ப்ளூடூத் 5.4
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- டூயல் நானோ சிம் ஆதரவு
விவோ ஒய்50ஐ 5ஜி விலை: சீன சந்தையில் விவோ ஒய்50ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ18500 ஆகும். இது டயமண்ட் பிளாக், அஸூர் மற்றும் பிளாட்டினம் என மூன்று கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இல்லை; தகவல் கிடைத்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடலின் அசல் விலை ரூ.19,999 என்றும், அதே நேரத்தில் 6ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.21,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- எச்டி பிளஸ் ரெசல்யூஷன் உடனான 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி ஏஐ டூயல் கேமரா செட்டப்
- 8எம்பி செல்பீ கேமரா
- 6,500mAh பேட்டரி
- 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- ப்ளூடூத் 4.2
- டூயல் பேண்ட் வைஃபை
- யூஎஸ்பி டைப்-சி 2.0 போர்ட்
- ஏஐ ஏரேஸ் (AI Erase) மற்றும் சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) போன்ற ஏஐ அம்சங்கள்'
அடுத்ததாக வரும் விவோ வி60 இ 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? 91மொபைல்ஸ் ஹந்தி வழியாக கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.30,999 மற்றும் ரூ.31,999 ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








