அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்500எஸ் (Vivo Y500s) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் விவோ ஒய்500எஸ் போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்500எஸ் அம்சங்கள் (Vivo Y500s Specifications): 6.75-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1570 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியும் இந்த விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்ககள் இந்த போனில் உள்ளன. விவோ ஒய்500எஸ் ஸ்மார்ட்போனின் எடை 219 கிராம் ஆகும். கேலக்ஸி சில்வர், அப்சிடியன் பிளாக் மற்றும் ஃபீனிக்ஸ் கோல்ட் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்500எஸ் போனின் விலை CNY 1,800 (இந்திய மதிப்பில் ரூ.24.800). மேலும் இதன் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை CNY 2,200 (இந்திய மதிப்பில் ரூ.30,400) ஆக உள்ளது. தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications