பின்றானே இவன்.. ரூ.19,000 பட்ஜெட்ல 7200mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக விவோ ஒய்500ஐ (Vivo Y500i) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, ஐபி69 ரேட்டிங் பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் விவோ 400 5ஜி மற்றும் விவோ 400 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆகவே, விவோ 500 சீரிஸ் மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மாடல்கள் முதல் சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டன. இதில் விவோ ஒய்500ஐ ஒட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டி தூக்கி இருக்கிறது.

சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட் மற்றும் இந்திய உள்பட மற்ற மார்கெட்களிலும் ஓரிரு மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, சீன வெர்ஷனில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களுக்கு என்ன பட்ஜெட் நிர்யணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
விவோ ஒய்500ஐ அம்சங்கள் (Vivo Y500i Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது.
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 கலர் டெப்த் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. சிஎம்ஓஎஸ் (CMOS) சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைத்துள்ளது. 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. செல்பீ கேமராவுக்கு 2X டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
நைட் சீன், போர்ட்ராய்டு போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7200mAh பேட்டரியை இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டிகைளை கொடுத்துள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,422 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,309 ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,901ஆகவும் உள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,901 ஆக இருக்கிறது. இதுபோக டாப் எண்ட் வேரியண்ட் உள்ளது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,492ஆகவும் இருக்கிறது. சீன மார்கெட்டில் கேலக்ஸி சில்வர் (Galaxy Silver), அப்சிடியன் பிளாக் (Obsidian Black), பீனிக்ஸ் கோல்டு (Phoenix Gold) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம். ஓரிரு மாதங்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








