கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி கேமரா.. 7200mAh பேட்டரி.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விவோ ஒய்500ஐ (Vivo Y500i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சீனாவில் டெலிகாம் தளத்தில் V2531A என்ற மாடல் நம்பர் உடன் இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இந்த விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய விவோ ஒய்500ஐ போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்500ஐ அம்சங்கள் (Vivo Y500i specifications): 6.75-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்
தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் ( Snapdragon 4 Gen 2 chipset) உடன் இந்த புதிய விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் வெளியாகும். இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ ஒய்500ஐ போன் வெளிவரும். மேலும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் ரியர் கேமரா உடன் விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளன.
இந்த விவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ ஒய்500ஐ போன் வெளிவரும்.
7200mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்500ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. விவோ ஒய்500ஐ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








