Home
Mobile

மொத்த மார்கெட்டுக்கும் ஒத்த ஆளு.. 8200mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. செப்.1-க்கு அப்புறம் இதுதான்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் தூக்கி சாப்பிடும்படியான பேட்டரியுடன் விவோ ஒய்500 (Vivo Y500) வெளியாக இருக்கிறது. 8800mAh பேட்டரி வருது, 15000mAh பேட்டரி வருது என்று மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் நேரடியாக வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை வெளியான விவோ ஸ்மார்ட்போன்களிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி இதில் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாகும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 8200mAh பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த மார்கெட்டுக்கும் ஒத்த ஆளு.. 8200mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

விவோ ஒய்500 அம்சங்கள் (Vivo Y500 Specifications): பெரிய 8200mAh பேட்டரி கிடைக்கிறது. IP69 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. ஆகவே, பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்க முடிகிறது. அதேபோல மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வருகிறது.

இதற்கு ஏற்ப டெஸ்டிங் செய்யப்பட்ட சர்டிபிகேஷனை பெற்றுள்ளது. மேலும், எஸ்ஜிஎஸ் கோல்டு லேபல் பைவ்-ஸ்டார் டிராப் (SGS Gold Label Five-star Drop) ரெசிஸ்டனட் கிடைக்க இருக்கிறது. அதேபோல இம்பாக்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க இருக்கிறது. ஆகவே, அதிக டியூரபிலிட்டி கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த விவோ ஒய்500 போன் இருக்கப்போகிறது.

இந்த வெளியீட்டு தேதி, பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்களை மட்டுமே விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல டிசைன் மற்றும் கலர் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. ஆகவே, வழக்கமாக கிடைக்கும் பஞ்ச்-ஹோல் டிசைன் வருகிறது. அதேபோல டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் வயலெட் (Violet) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பார்க்கையில், இந்த விவோ ஒய்500 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 50 எம்பி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த விவோ ஒய்500 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 1ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாகி பிறகு, இந்தியா உள்ளிட்ட மற்ற மார்கெட்களில் களமிறங்க இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் ஏற்கனவே விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போன் அதிக பேட்டரி கேபாசிட்சி மாடலாக வெளியாகி இருக்கிறது. இதில் 7300mAh பேட்டரி கிடைக்கிறது. இதுபோக 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. அதேபோல MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன், IP65 ரேட்டிங் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஃபுல்எச்டி அமோலெட் டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ஆகவே, இந்த விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வந்தால் ரூ.25,000 பட்ஜெட்டிலேயே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y500 With 8200mAh Battery 50MP Camera To Launch on September 1 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X