VIVO நீ தான் வொர்த்து.. ரூ.15000 பட்ஜெட்டில் 8100mAh பேட்டரி, 50MP கேமரா, IP69 உடன் புது போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் ஆனது 8100mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை மிகவும் அமைதியான முறையில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்துள்ளது. ஆக விரைவில் இது இந்தியா உஉள்ளிட்ட மற்ற சந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. அது விவோ ஒய்500 (Vivo Y500) ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் விவோ ஒய்500, விவோ ஒய்500ஐ, விவோ ஒய்500எஸ் மற்றும் விவோ ஒய்500 ப்ரோ போன்ற விவோ ஒய்500 சீரிஸ் (Vivo Y500 Series) மாடல்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும், சீனாவிற்கு வெளியே அறிமுகமாகும் விவோ ஒய்500 சீரீஸின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

முன்னரே குறிப்பிட்டபடி விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று அதன் 8100mAh பேட்டரி ஆகும். இது சீனாவிற்கு வெளியே அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்டதாகும். பெரிய பேட்டரியை தவிர, இந்த போனில் அமோஎல்இடி டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் கொண்ட டூயல் கேமரா செட்டப் மற்றும் ஆர்ஜின்ஓஎஸ் 6 ஆகிய அம்சங்களும் உள்ளன.
விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள்:
- 2800 x 1260 ரெசல்யூஷன் கொண்ட 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 449ppi பிக்சல் டென்சிட்டி
- 5000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் பிரைட்னஸ்,
- 94.47 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- SGS லோ ப்ளூ லைட் மற்றும் SGSபைவ் ஸ்டார் சன்லைட் ரீடபிள் டிஸ்பிளே
- கேமிங் ஐ ப்ரொடெக்ஷன் (Gaming Eye Protection) வசதி
- யுனிசாக் டி7300 சிப்செட் (இது 4ஜி சிப்செட் ஆகும்; அதாவது இந்த மாடல் 5ஜி போன் அல்ல)
- 8GB ரேம் மற்றும் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ்
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8,100mAh பேட்டரி
- நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெப்பத்தை கட்டுப்படுத்த, இதில் 3,000mm² வேப்பர் சேம்பர் (vapor chamber) கூலிங் சிஸ்டம்
- Android 16-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ்
- இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 50 மெகாபிக்சல் Sony IMX852 ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ப்ளூடூத் 5.4, டூயல்-பேண்ட் வை-ஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி 2.0 போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்
- இரட்டை நானோ-சிம் ஆதரவு
- IP68 மற்றும் IP69 தரத்திலான நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன்
- MIL-STD-810H ராணுவத் தரத்திலான அதிர்வு எதிர்ப்பு திறன்
விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் விலை: இது பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34000 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும் போது இவ்வளவு அதிக விலைக்கு நிச்சயம் வராது. இந்தியாவில் இது அதிகபட்சம் ரூ.12,000-ரூ.16,000 பட்ஜெட் வரை செல்லலாம்.
விவோவின் இன்னொரு 8000+ எம்ஏஎச் பேட்டரி போன்: மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்பட. விவோ எக்ஸ்500 (VIVO X500) ஸ்மார்ட்போன் ஆனதும் ஷாவ்மீ 18 மாடலை போலவே 8000mAh அல்லது அதற்கும் மேலான கெப்பாசிட்டி கொண்ட பேட்டரியை பேக் செய்யலாம்.
விவோ எக்ஸ்500 சீரீஸின் கீழ் குறைந்தது நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - அவைகள் விவோ எக்ஸ்500இ (Vivo X500e), விவோ எக்ஸ்500 (Vivo X500), விவோ எக்ஸ்500 ப்ரோ (Vivo X500 Pro) மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) மாடல்கள் ஆகும் விவோ எக்ஸ்500 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2026 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications