Home
Mobile

இவ்ளோ கம்மி விலைக்கு 200MP OIS கேமரா + 7000mAh பேட்டரி காம்பினேஷன்-ஆ.. VIVO-வின் புதிய 5ஜி போன்!

விவோ நிறுவனமானது அதன் எக்ஸ் சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய 2 புதிய பிளாக்ஷிப் கேமரா ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்த கையோடு, ஒய் சீரீஸின் கீழ் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது

அது விவோ ஒய்500 ப்ரோ (Vivo Y500 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற நவம்பர் 10 ஆம் தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என்பதை விவோ உறுதிப்படுத்தி உள்ளது. விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானதால் இதுவும் இந்திய சந்தைக்கு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

200MP OIS கேமரா + 7000mAh பேட்டரி.. VIVO-வின் புதிய 5ஜி போன்!

விவோ நிறுவனமானது விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் - டிஸ்பிளே, மெயின் கேமரா, பேட்டரி மற்றும் டிசைன் போன்ற சில முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது; மீதமுள்ள அம்சங்கள் - சீனா டெலிகாம் (China Telecom) லிஸ்டிங் வழியாக லீக் ஆகியுள்ளன.

விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்ன்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.67-இன்ச் டிஸ்பிளே
- 2800 x 1260 பிக்சல்ஸ் 1.5கே ரெசல்யூஷன்
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- OIS ஆதரவு உடனான 200-மெகாபிக்சல் (சாம்சங் HP5) பிரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் செக்கண்டரி கேமரா

- 7000mAh பேட்டரி
- 90W வயர்டு சார்ஜிங்
- பிளாஸ்டிக் பிரேம் மற்றும் ஒரு கிளாஸ் பேக்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்க ஐபி68 / ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 160.23 x 74.51 x 7.81 மிமீ
- எடையில் சுமார் 198 கிராம்

விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது லைட் க்ரீன், டைட்டானியம் பிளாக், சாஃப்ட் பிங்க் மற்றும் ஆஸ்பிசியஸ் கிளவுட் கோல்ட் ஆகிய 4 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆகிய 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். விலை ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும்.

விவோ எக்ஸ்300, விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து விவோ எக்ஸ்300 மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 2025 டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,43,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி உடனான ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.1,13,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78 இன்ச் பிளாட் க்யூ10 பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,440 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y500 Pro With 7000mAh Battery Launching on November 10 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X