Home
Mobile

அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்500 ப்ரோ (Vivo Y500 Pro) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 7000mAh பேட்டரி, 200எம்பி கேமரா, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்500 ப்ரோ அம்சங்கள் (Vivo Y500 Pro Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260×2,800 பிக்கசல்ஸ், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 200MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

200எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சர் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளத. எனவே இந்த ஸ்மாரட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த அசத்தலான விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆணட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.

7000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 200MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

5ஜி, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், வைஃபை, க்ளோனஸ் (GLONASS), கலிலியோ,நேவிக் (NavIC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனின் எடை 198 கிராம் ஆகும்.

தற்போது விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 1,799 (ரூ.22,000)-ஆக உள்ளது. ஆஸ்பிசியஸ் கிளவுட், லைட் கிரீன், சாஃப்ட் பவுடர் மற்றும் டைட்டானியம் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y500 Pro with 7000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X