Home
Mobile

நவம்பர் 10 சம்பவம் இருக்கு.. 200MP கேமரா.. 7000mAh கேமரா.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் புதிய விவோ ஒய்500 ப்ரோ (Vivo Y500 Pro) ஸ்மார்ட்போன் ஆனது Geekbench தளத்தில் V2516A என்ற மாடல் எண் உடன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் நவம்பர் 10-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் படங்கள், முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

விவோ ஒய்500 ப்ரோ அம்சங்கள் (Vivo Y500 Pro Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek's Dimensity 7300 chipset) உடன் விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

நவம்பர் 10 சம்பவம் இருக்கு.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

நவம்பர் 10 சம்பவம் இருக்கு.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

அதுவும் 7000mAh பேட்டரி உடன் விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo credit: ZionsAnvin, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y500 Pro launch date revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X