Home
Mobile

8.23mm ஸ்லிம் டிசைனில் 8200mAh பேட்டரி.. கேட்டதும் வாங்க தூண்டும் பட்ஜெட்டில் புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

8200mAh என்கிற பெரிய பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது விவோ ஒய்500 (Vivo Y500) ஸ்மார்ட்போன் ஆகும். இது சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளது போல் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழ் தரவுத்தளத்தில் வெளிவந்துள்ளது. இது - இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு தயாராக உள்ளதை குறிக்கிறது

விவோ ஒய்500 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விவோ நிறுவனம் சீனாவில் ஏற்கனேவே ஒய்500 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகளாவிய வெளியீட்டிற்கான திட்டங்களை விவோ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சான்றிதழ் நடவடிக்கைகள் ஆனது இதுகுறித்த ஒரு அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

8.23mm ஸ்லிம் டிசைனில் 8200mAh பேட்டரி.. புது விவோ 5ஜி போன்!

மேலும் விவோ தனது வழக்கமான உத்தியை பின்பற்றினால், க்ளோபல் விவோ ஒய்500 வேரியண்ட் ஆனது சைனீஸ் வேரியண்ட்டில் உள்ள பெரும்பாலான அம்சங்களை தக்க வைத்து கொள்ளக்கூடும். அப்படியானால் விவோ ஒய்500 ஆனது - பேட்டரி லைஃப்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும், பல முக்கிய அம்சங்கள் நிறைந்த ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் .

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- HDR10+ ஆதரவு
- மீடியாடெக்கின் டைமென்சிட்டி 7300 சிப்செட்
- 12GB வரையிலான LPDDR4X ரேம்
- 512GB வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 15

- 50MP ப்ரைமரி சென்சார் + 2MP டெப்த் சென்சார்
- 8MP செல்பீ கேமரா
- குறைந்த ஒளி நிலைகளில் போர்ட்ரெய்ட் போட்டோவை மேம்படுத்தும் ஆரா லைட் சிஸ்டம்
- 8200mAh பேட்டரி
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு
- ஒப்பீட்டளவில் 8.23மிமீ ஸ்லிம் டிசைன்
- பெரிய கொள்ளளவை அடைய செமி-சாலிட்-ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பத்தை விவோ பயன்படுத்தியுள்ளது

இந்தியாவில் விவோ ஒய்500 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் ஆனது விவோ ஒய்500 ப்ரோ மாடலுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்து இந்த சீரிஸின் விலை ரூ.20,000 - ரூ.35,000 வரை செல்லலாம். குறிப்பாக விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிஸ்பாட்டின் கருத்து: முன்னரே குறிப்பிட்டபடி , நீங்கள் பேட்டரி லைஃப்க்கு அதிக முன்னுரிமை அளித்தால், விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும். சற்றே பெரிய அமோஎல்இடி டிஸ்பிளே, டைமென்சிட்டி 7300 சிப்செட், பெரிய பேட்டரி உடன் சேர்த்து நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றின் கலவையானது, அதிக நம்பகத்தன்மை கொண்ட பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கும் ஹெவி யூசர்களுக்கும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் மற்றும் மொபைல் கேமர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்

விவோ தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களில் - சீனாவில் நடந்த விவோ எஸ்60 மற்றும் விவோ எஸ்60இ (VIVO S60e) ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் முக்கியம். சீனாவில் எஸ் சீரீஸின் கீழ் வரும் மாடல்கள் இந்திய சந்தையில் வி சீரீஸின் கீழ் வர வாய்ப்புள்ளதால், இவ்விரு மாடல்கள் மீதும் நாம் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

விவோ எஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது புகைப்படம் எடுக்கும் திறன் மற்றும் பேட்டரி லைஃப் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. அதே சமயம் அதன் கச்சிதமான டிசனையும் பெற்றுள்ளது. விவோ எஸ்60 சீரிஸின் ஒரு முக்கிய சிறப்பம்சம் அதன் பிரம்மாண்டமான 7,200mAh பேட்டரி ஆகும்.

Best Mobiles in India

English summary
Vivo Y500 New 5G Phone with massive 8200mAh battery All to Set to globally Soon Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X