Home
Mobile

அசரவைக்கும் Vivo.. 8200mAh பேட்டரி.. 50MP கேமரா.. 90W சார்ஜிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்500 (Vivo Y500) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்500 அம்சங்கள் (vivo Y500 Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அசரவைக்கும் Vivo.. 8200mAh பேட்டரி.. புது 5ஜி போன் அறிமுகம்..

தரமான ஆக்டோ கோர்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் உடன் விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரிண்ட்களில் இந்த விவோ போனை வாங்க முடியும். ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 15 (OriginOS 15)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அசரவைக்கும் Vivo.. 8200mAh பேட்டரி.. புது 5ஜி போன் அறிமுகம்..

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு ஆரா லைட் (Aura light) மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) விவோ ஒய்500 போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், என்எப்சி, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளது.

அசரவைக்கும் Vivo.. 8200mAh பேட்டரி.. புது 5ஜி போன் அறிமுகம்..

8200mAh பேட்டரி உடன் விவோ ஒய்500 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு கிளேசியர் ப்ளூ, டிராகன் கிரிஸ்டல் பர்பிள் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

குறிப்பாக விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1399 yuan (இந்திய மதிப்பில் ரூ.17,300)-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 5 முதல் சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
vivo Y500 launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X