Home
Mobile

வெற்றி கொண்டான் VIVO.. 8100mAh பேட்டரி உடன் புது பட்ஜெட் போன்.. அம்புட்டு பேரும் தட்டி தூக்க போறாங்க!

வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுவது போல, இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் புதுப்புது 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், விவோ (Vivo) நிறுவனமானது விரைவில் அதன் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது

அது விவோ ஒய்500 4ஜி (Vivo Y500 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய சிறப்பம்சங்களையும் விவோ வெளிப்படுத்தியுள்ளது. கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தரவுத்தளத்தில் இந்த போன் காணப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த அறிமுக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வெற்றி கொண்டான் VIVO.. 8100mAh பேட்டரி உடன் புது பட்ஜெட் போன்!

நேபாளத்தில் விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த டீசர்களை (teasers) விவோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் வெளியிட தொடங்கியுள்ளது. நேபாளத்தை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவில் விவோ ஒய்-சீரீஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் - நாம் இதன் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

விவோ வெளியிட்டுள்ள டீசர்கள் ஆனது, விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே இன்பினிட்டி அமோஎல்இடி (Infinity AMOLED) டிஸ்பிளே மற்றும் 8100mAh ப்ளூவோல்ட் (BlueVolt) பேட்டரியை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சரியான அறிமுக தேதியை விவோ நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ப்ரோமோஷனல் போஸ்ட்கள் ஆனது இதன் அறிமுகம் வெகு விரைவில் இருக்கலாம் என்பதை குறிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது "மிகவும் மென்மையான செயல்பாட்டை கொண்ட பிராசஸரில்" (ultra-smooth processor) இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, செங்குத்தாக அமைக்கப்பட்ட ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது; டீசரில் ஒயிட் கலர் ஆப்ஷனை பார்க்க முடிக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் யுனிசாக் டி7300 பிராசஸருடன் கூகுல் பிளே கன்சோல்-இல் காணப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 16 மற்றும் 8ஜேபி ரேம்-ஐ கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்500 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ஆக இருக்கும்

அங்கே இந்த ஸ்மார்ட்போன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.17,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது. ஆக 4ஜி வேரியண்ட்டின் விலை இன்னும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

விவோ ஒய்500 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்குகிறது. மேலும் 12ஜிபி வரையிலான LPDDR4x RAM மற்றும் 512ஜிபி வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜையும் கொண்டு உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ ஒய்500 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) வழங்கும் 6.77-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு, இது 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை விவோ ஒய்500 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8200mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இந்த விவோ ஸ்மார்ட்போன், தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்கான IP68, IP69 மற்றும் IP69+ தரநிலைகளையும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y500 4G With AMOLED Display 8100mAh BlueVolt battery Global Launch Confirmed Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X