Home
Mobile

வா செல்லம்.. 8000mAh பேட்டரி + 4ஜி காம்பினேஷனில் புது VIVO போன்.. அடிச்சு புடிச்சு வாங்க போகும் இந்தியர்கள்!

விவோ நிறுவனம் 8000mAh பேட்டரி + 4ஜி சப்போர்ட் என்கிற சுவாரசியமான காம்பினேஷனில் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது விவோ ஒய்500 4ஜி (Vivo Y500 4G) மாடல் ஆகும்.

இது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்500 5ஜி மாடலின் 4ஜி வேரியண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த போன் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

வா செல்லம்.. 8000mAh பேட்டரி + 4ஜி காம்பினேஷனில் புது VIVO போன்!

துரதிர்ஷ்டவசமாக, கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங் வழியாக விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை இருப்பினும் டெக் அவுட்லுக் (Tech Outlook) ஆனது இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், அதில் உள்ள முக்கிய அம்சங்களையும் நாம் இதில் எதிர்பார்க்கலாம்.

விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1,260×2,800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 'பஞ்ச்-ஹோல்' (punch-hole) டிஸ்பிளே
- ஆக்டா-கோர் Spreadtrum UM9360 SoC (இது Unisoc T7300 சிப்செட் ஆக இருக்கலாம்
- 8GB RAM மற்றும் Android 16-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ் உடன் வரலாம்
- 5ஜி மாடலில் உள்ளதை போன்ற 8,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கலாம்

இது உண்மையாகவே 8000mAh பேட்டரியை கொண்டிருந்தால், விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் விலைப் பிரிவில் ஒரு சுவாரஸ்யமான ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும். ஏனென்றால் சந்தையில் பல 4ஜி ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அவற்றில் எதுவும் 6000mAh-க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியை வழங்குவதில்லை.

எனவே தனது பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி மூலம், விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தனது போட்டியாளர்களிடமிருந்து தனித்துத் தெரியக்கூடும். குறிப்பாக இந்திய சந்தையில் இது நிச்சயம் சாத்தியமாகும். விவோ நிறுவனம் இதற்கு சாதகமான விலையை நிர்ணயித்தால், இந்த ஆண்டு வெளியாகும் மிகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது திகழும் வாய்ப்புள்ளது.

4-ஸ்க்ரீன் மோட் உடன் வரும் விவோ ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலை 4ஜி போன் ஒருபக்கம் இருக்க, விவோ நிறுவனமானது 4-ஸ்க்ரீன் மோட் உடனான ஒரு ஸ்மார்ட்போனையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போன் ஆகும் . இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த போல்டபிள் (Foldable) போனின் முக்கிய சாஃப்ட்வேர் அம்சம் ஒன்றை விவோ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் சாஃப்ட்வேர் அனுபவத்தை வழங்கும் நோக்கில், விவோ நிறுவனம் ஆனது அதன் விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனில் புதிய 'மல்டிடாஸ்கிங்' வசதிகளை, அதாவது ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யும் வசதிகளை சேர்த்து உள்ளது.

விவோவின் தயாரிப்பு மேலாளரான ஹான் போக்ஸியாவ் (Han Boxiao), வெய்போ (Weibo) பதிவு ஒன்றின் மூலம், விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனில் அடாமிக் வொர்க்பெஞ்ச்சின் (Atomic Workbench) ஒரு பகுதியாக பேரலல் மோட் (Parallel mode) என்கிற புதிய அம்சம் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

உதாரணமாக, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, ​​ஒரு பொருளுக்கான மிக குறைந்த விலையை கண்டறிய நான்கு ஷாப்பிங் ஆப்களை அருகருகே திறந்து வைத்துக்கொள்ளலாம். அல்லது பயணத்தின்போது, ​​மியூசிக் ஆப், மேப்ஸ் (maps), நேவிகேஷன் ஆப் மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றை ஒரே நேரத்தில் திறந்து வைத்து, நீங்கள் செல்ல விரும்பும் இடங்களை கண்காணிக்கலாம்.

Best Mobiles in India

English summary
VIVO Y500 4G Launching Soon May Pack 8000mAh Battery Like Its 5G Variant Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X