Home
Mobile

இந்தியாவில் இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ நிறுவனம் தனது விவோ S1 ப்ரோ மற்றும் விவோ y50 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களம் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த கேமரா வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

விலைகுறைக்கப்பட்டு

விவோ S1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ y50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 மாடல் 6.53-இன்ச் iView

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் iView எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.

மார்ட்போன் மாடல்

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5000எம்ஏஎச் பேட்டரி

விவோ Y50ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போன் மாடல் 6.38-

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

 ஸ்மார்ட்போனின் கேமராக

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக அம்சம் சற்று வித்தயசமாக உள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டைமண்ட் வடிவில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது
குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Vivo Y50, Vivo S1 Pro Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X