இந்தியாவில் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
விவோ நிறுவனத்தின் அசத்தலான விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ இ-ஸ்டோர் உள்ளிட்ட வலைதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் iView எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.
விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விவோ Y50ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ் 10 க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் மேலும் 17,990-விலையில் இந்த விவோ Y50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








