Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.14,404 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவத்தின் விவோ ஒய்50 5ஜி (Vivo Y50 5G) போனானது வெளியாகி இருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், எல்சிடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொடுக்கிறது. இந்தியாவில் விவோ ஒய்50 4ஜி வேரியண்ட் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் 5ஜி வேரியண்ட் வந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ நிறுவனத்தின் புதிய மாடல்கள் முதலில் சீனாவில் வெளியாகும். அதன் பிறகு இந்தியா உள்பட மற்ற மார்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல விவோ ஒய்50 4ஜி வேரியண்ட் சீனாவுக்கு பிறகு இந்தியாவில் வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு விவோ ஒய்50 5ஜி சீன மார்கெட்டில் வந்துள்ளதால், இந்திய விவோ பிரியர்களும் இதற்கு காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

ஏனென்றால், கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இந்த விவோ ஒய்50 5ஜி வெளியாகி இருக்கிறது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சரும் பக்காவாகவே இருக்கிறது. பிளாட்டினம் (Platinum), அசுர் (Azure) மற்றும் டயமன்ட் பிளாக் (Diamond Black) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. 4 வேரியண்ட்களுடன் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் வெளியாகி இருக்கிறது. இப்போது, இந்த விவோ ஒய்50 5ஜி போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.14,404 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி போன்!

விவோ ஒய்50 5ஜி அம்சங்கள் (Vivo Y50 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. இந்த கம்மி விலையிலும் பர்ஃபாமென்ஸ் தரமாக எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் அதற்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

அதிக பேட்டரி பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 16.7 மில்லியன் ஸ்கிரீன் கலர் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கம்மி பட்ஜெட் மாடலாக இருப்பதால், 13 எம்பி மெயின் + 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.14,404ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.18,009ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.24,016ஆக இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.27,620ஆக இருக்கிறது. இது சீனாவில் இந்த விவோ ஒய்50 5ஜி போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, இதில் மாற்றங்கள் இருக்கலாம். இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y50 5G With 12GB RAM 6000mAh Battery 13MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X