வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்400 ப்ரோ (Vivo Y400 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவோ ஒய்400 ப்ரோ படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ ஒய்400 ப்ரோ அம்சங்கள் (Vivo Y400 Pro specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் வீடியோ எடிட்டிங் போன் வசதிகளுக்கும் இந்த போன் மிக அருமையாகப் பயன்படும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா (Sony IMX882 primary camera) + 2எம்பி பொக்கெ லென்ஸ்(bokeh lens) என்கி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன்
(AI Screen Translation), லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.
IR பிளாஸ்டர் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: xpertpick
source: xpertpick


Click it and Unblock the Notifications








