ஜூன் 20 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. வருகிறது புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்400 ப்ரோ (Vivo Y400 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் வரும் ஜூன் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் விவோ ஒய்400 ப்ரோ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ ஒய்400 ப்ரோ அம்சங்கள் (Vivo Y400 Pro specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா (Sony IMX882 primary camera) + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன்
(AI Screen Translation), லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவரும்.
IR பிளாஸ்டர் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
5500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








