SALE பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான விவோ ஒய்400 ப்ரோ 5ஜி (Vivo Y400 Pro 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. அல்ட்ரா ஸ்லிம் பாடி மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொடுக்கும் இந்த விவோ ஒய்400 ப்ரோ 5ஜி போனின் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்400 ப்ரோ 5ஜி அமேசான் விற்பனை (Vivo Y400 Pro 5G Amazon Sale): இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனில் மூன்று கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, ஃப்ரீஸ்டைல் ஒயிட் (Freestyle White), ஃபெஸ்ட் கோல்டு (Fest Gold) மற்றும் நெபுலா பர்பிள் (Nebula Purple) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் நெபுலா பர்பிள் மாடலானது, வெறும் 7.49 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைப்பதால், பிரீமியம் ஹேண்டி பீல் எதிர்பார்க்கலாம்.
விவோ ஒய்400 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y400 Pro 5G Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. விவோவின் மிட்-ரேஞ்ச் போன்களில் வழக்கமாக கிடைக்கும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 எம்சி ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 387 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் P3 கலர் காமட் கிடைக்கிறது.

மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக ஃபுல்எச்டி ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற ஓடிடி பிரியர்கள் விரும்பும் பீச்சர்களும் கிடைக்கின்றன. லேட்டஸ்ட் விவோ மாடல்களில் கிடைக்கும் ஆரா லைட் இந்த விவோ ஒய்400 ப்ரோ 5ஜி போனிலும் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.
இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்400 ப்ரோ 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, பேட்டரி பேக்கப் பார்க்கலாம்.
இந்த விவோ போனில் கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தும், 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு சில நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும்படியான 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ போன்ற வழக்கமாக பீச்சர்களும் கிடைக்கின்றன. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.


Click it and Unblock the Notifications