Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Vivo 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்400 ப்ரோ (Vivo Y400 Pro) ஸ்மார்ட்போனை நாளை (ஜூன் 20) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் முன்பு விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நாளை அறிமுகமாகும் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போன் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்400 ப்ரோ அம்சங்கள் (Vivo Y400 Pro specifications): ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் விவோ ஒய்400 ப்ரோ போன் வெளிவரும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த விவோ ஒய்400 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா (Sony IMX882 primary camera) + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் 5500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. IR பிளாஸ்டர் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y400 Pro 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X