Home
Mobile

பக்கா மாஸ்.. 5ஜி, 3D கர்வ்டு டிஸ்பிளே, Circle to Search, 50MP சோனி கேமரா, IP65.. Vivo-வின் புதிய போன்!

விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக விவோ ஒய்400 ப்ரோ 5ஜி (Vivo Y400 Pro 5G) மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? எப்போது முதல் விற்பனை? என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? இதன் விரிவான அம்சங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது.

பக்கா மாஸ்.. 5ஜி, 3D கர்வ்டு டிஸ்பிளே.. Vivo-வின் புதிய போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரை இது 7.49மிமீ தடிமனை கொண்டுள்ளது மற்றும் இந்த விலை பிரிவில், 3டி கர்வ்டு டிஸ்பிளே கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பல ஏஐ ஆதரவு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் கூகுளின் மிகவும் பிரபலமான சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) ஆதரவும் அடங்கும். இது ஸ்க்ரீனில் தெரியும் விஷயத்தை சர்க்கிள் செய்வதன் மூலம் அதை சேர்ச் செய்து, அதைப்பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகவும் பிரபலமான அம்சமாகும்

விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 300ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.77-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 15 உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.79 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார் மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 2-மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 4கே வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் AI Photo Enhance மற்றும் AI Erase 2.0 போன்ற ஏஐ அடிப்படையிலான இமேஜிங் அம்சங்களும் உள்ளன. கூடவே இது AI Note Assist, AI Transcript Assist, AI Screen Translation மற்றும் AI Superlink போன்ற பல உற்பத்தித்திறன் மிக்க அம்சங்களையும் கொண்டுள்ளது

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை - டூயல் நானோ சிம், 5ஜி, 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது கடைசியாக இது ஐபி65 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பை பெற்றுள்ளது.

விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போன் ஃப்ரீஸ்டைல் ​​ஒயிட், ஃபெஸ்ட் கோல்ட் மற்றும் நெபுலா பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோ இந்தியா வலைத்தளத்தில் ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கிறது. வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y400 Pro 5G Launched in India Priced Under Rs 30000 Budget Category Sale Starts From June 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X