நாளைக்கு லான்ச் ஆகும் இந்த விவோ 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 4) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
விவோ ஒய்400 5ஜி அம்சங்கள் (Vivo Y400 5G specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப் (Snapdragon 4 Gen 2 chip)உடன் இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக 6.7-இன்ச் கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
அதேபோல் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்க்கிள் டு சர்ச்" (Circle to Search), ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ ஒய்400 5ஜி போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








