தள்ளுபடி விலையில் அசத்தலான Vivo 5ஜி போன்.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் தற்போது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.21499 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்400 5ஜி விவரக்குறிப்புகள் (Vivo Y400 5G Specifications): 6.7-இன்ச் கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1,080×2,400 பிக்சல்ஸ், எச்டிஆர்10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப் (Snapdragon 4 Gen 2 chip) உடன் இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். 5ஜி, 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. இந்த போனின் எடை 198 கிராம் ஆகும்.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








