Home
Mobile

புதிய Vivo Y400 5G போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. 6000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன விலை?

விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த விவோ ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்400 5ஜி விவரக்குறிப்புகள் (Vivo Y400 5G Specifications): 6.7-இன்ச் கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1,080×2,400 பிக்சல்ஸ், எச்டிஆர்10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

புதிய Vivo Y400 5G போன் அறிமுகம்.. 6000mAh பேட்டரி.. என்ன விலை?

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப் (Snapdragon 4 Gen 2 chip) உடன் இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 6000mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 198 கிராம் ஆகும்.

ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். 5ஜி, 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்400 5ஜி போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.23,999-ஆக உள்ளது.ஆலிவ் க்ரீன் (Olive Green), கிளாம் ஒயிட் (Glam White) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி விவோ இந்தியா இ-ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த புதிய விவோ 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y400 5G Launched in India Check Out Price Offer Specifications Sale From August 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X