அதிருது இந்திய மார்க்கெட்.. 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த புதிய விவோ போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்400 5ஜி அம்சங்கள் (Vivo Y400 5G specifications): IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அதேபோல் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப் (Snapdragon 4 Gen 2 chip)உடன் இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்பளையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த போன் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆலிவ் க்ரீன் (Olive Green), கிளாம் ஒயிட் (Glam White) நிறங்களில் இந்த போன் வெளியாகும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய விவோ போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








