Home
Mobile

திடீரென விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்3 எஸ் (2021) Vivo Y3s (2021) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் அமேசான் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ ஒய்3 எஸ் (2021)

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்ட ரூ.9,490-விலையில் வாங்க முடியும். மேலும் Pearl White, Mint Green,Starry Blue நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Beauty mode, timelapse, ஃப்ளாஷ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் மாடல்.

திடீரென விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் வி 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்3 எஸ் (2021) சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் Reverse Charging
ஆதரவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

திடீரென விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ எஸ்10இ

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது.

குறிப்பாக விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

திடீரென விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன். வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ எஸ்10இஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y3s (2021) Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X