Home
Mobile

சத்தமில்லாமல் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Vivo.. 6500mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் தனது புதிய விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6500mAh பேட்டரி, 6.68-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.

சத்தமில்லாமல் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Vivo.. எந்த மாடல்?

அதேபோல் தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் இந்த விவோ ஒய்39 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்39 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டிழமநா கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சத்தமில்லாமல் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Vivo.. எந்த மாடல்?

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆனால் தற்போது விவோ ஒய்39 5ஜி போன் மலேசியாவில் (Malaysia) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி விவோ ஒய்39 5ஜி போனின் விலை $225 (இந்திய மதிப்பில் ரூ.19,620)-ஆக உள்ளது. ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் கேலக்ஸி கேலக்ஸி பர்புல் (Galaxy Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y39 5G with Snapdragon 4 Gen 2 launched: Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X