Home
Mobile

யாரு விடுவா? ரூ.15,999 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. ஆஃபரில் விவோ 5ஜி போன்..

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அதுவும் பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) போன் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்39 5ஜி மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2) உடன் இந்த விவோ ஒய்39 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TÜV Rheinland Eye Protection) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), லைவ் டெக்ஸ்ட் (Live Text), உள்ளிட்ட பல்வேறு AI அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஏஐ மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y39 5G with 8GB RAM available at a discounted price on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X