செம ஆஃபர் விலையில் Vivo 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 6500mAh பேட்டரி, சோனி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இந்நிலையில் இந்த விவோ ஒய்39 5ஜி போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் இந்த விவோ ஒய்39 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 2 ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும்.
அதேபோல் 6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TÜV Rheinland Eye Protection) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search),ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink), லைவ் டெக்ஸ்ட் (Live Text), உள்ளிட்ட பல்வேறு AI அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த போன் வெளிவந்தது. ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஏஐ மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் 6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








