அமேசான் சேல் 2025.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. குறைந்த விலையில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் பிரைம் டே சேல் 2025 (Amazon Prime Day Sale 2025) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் பிரைம் டே விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்39 5ஜி போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): 50எம்பி சோனி ஏஐ மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2) உடன் இந்த விவோ ஒய்39 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.
6.68-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TÜV Rheinland Eye Protection) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink),
லைவ் டெக்ஸ்ட் (Live Text), உள்ளிட்ட பல்வேறு AI அம்சங்களுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த போன் வெளிவந்தது.

6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவும் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் இன்னும் பல அசத்தலான விவோ போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








