Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. ரூ.16,999 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்..

விவோ நிறுவனம் விரைவில் விவோ ஒய்39 5ஜி (Vivo Y39 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டிப்ஸ்டர் Sudhanshu Ambhore இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல் மற்றும் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். வரும் வாரங்களில் இந்த விவோ ஒய்39 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அதுவும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்39 5ஜி வேரியண்ட் ரூ.16,999 விலையிலும், இதன் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 விலையிலும் வெளிவரும் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்போது விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க.. 44W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்..

விவோ ஒய்39 5ஜி அம்சங்கள் (Vivo Y39 5G specifications): எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி பொக்கே சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Take a Poll

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் இந்த விவோ ஒய்39 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஓசன் ப்ளூ (Ocean Blue), லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) நிறங்களில் இந்த விவோ ஒய்39 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்39 5ஜி போனில் உள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y39 5G India price and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X