அதிர போகுது ஆர்டர்.. 50MP கேமரா.. Ring LED.. 256GB மெமரி.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்38 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் முழு விவரங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்38 5ஜி அம்சங்கள் (Vivo Y38 5G specifications): 6.68-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்38 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் ( Snapdragon 4 Gen 2 chipset) வசதியுடன் இந்த அசத்தலான விவோ ஒய்38 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்38 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெபத் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்38 5ஜி போன். குறிப்பாக ரிங் எல்இடி பிளாஷ் (ring LED flash)ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே இரவு நேரங்களில் இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்டுள்ளது விவோ ஒய்38 5ஜி போன்.
6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்38 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாகச் செய்ய முடியும்.

IP64 ரேட்டிங் கொண்டு வெளிவந்துள்ளது விவோ ஒய்38 5ஜி போன். மேலும் 5ஜி, டூயல் சிம், வைஃபை, புளூடூத், என்எப்சி, யூஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த விவோ ஒய்38 5ஜி போனின் எடை 199 கிராம் ஆகும்.
பசிபிக் ப்ளூ மற்றும் டார்க் கிரீன் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் விவோ ஒய்38 5ஜி போன் ஆனது தற்போது தைவானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போனின் விலை வெளியிடவில்லை விவோ நிறுவனம். விரைவில் இந்த போனின் விலை குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








