5500mAh பேட்டரி, IP64 ரேட்டிங் உடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.. என்ன மாடல்?
ரியல்மி நிறுவனத்திற்கு கடும் போட்டியை கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான விவோ, தொடர்ச்சியான முறையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. ரியல்மி நிறுவனம் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அதன் ரியல்மி 14டி 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில், விவோ நிறுவனம் சீன சந்தையில் ":அதே போன்ற பட்ஜெட்டில்" விவோ ஒய்37சி (Vivo Y37c) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
விவோ ஒய்36 மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டதால், இது எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விவோ ஒய்37எஸ் மாடல் ஆனது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்37 மற்றும் விவோ ஒய்37எம் மற்றும் விவோ ஒய்37 ப்ரோ ஆகிய மாடல்களை கொண்ட விவோ ஒய்37 சீரீஸில் இணைகிறது.

விவோ ஒய்37சி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் உடனான பெரிய 6.56-இன்ச் HD+ எல்சிடி டிஸ்பிளே
- யுனிசாக் T7225 சிப்செட்
- 6ஜிபி LPDDR4x ரேம்
- 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ்
- 13 மெகாபிக்சல் ரியர் கேமரா
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 15W சார்ஜிங்
- 5,500mAh பேட்டரி
- டூயல் சிம் 4ஜி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
விவோ ஒய்37சி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் விவோ ஒய்36சி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டார்க் கிரீன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் வெளியாகியுள்ளது. சீனாவிற்கு வெளியே உள்ள பிற சந்தைகளில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை விவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைட்னிங் பர்பிள், அப்சிடியன் பிளாக் மற்றும் சர்ஃப் க்ரீன் ஆகிய கலர்களில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 92.7 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 111 சதவீதம் DCI-P3 வைட் கலர் கேமட் மற்றும் இரவில் கண்களின் அழுத்தத்தை குறைப்பதற்கான TÜV ரீன்லேண்ட் சான்றிதழ் ஆகிய அம்சங்கள் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ அம்சத்தையும், ஏஐ ஆதரவுடன் கூடிய இமேஜிங் டூல்களையும் ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








