மிரண்டு போன மார்க்கெட்.. பட்ஜெட் விலை.. 5000mAh பேட்டரி.. 256GB மெமரி.. அறிமுகமானது விவோ 5G போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்37 5ஜி (vivo Y37 5G) ஸ்மாரட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். இப்போது விவோ ஒய்37 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்37 5ஜி அம்சங்கள் (vivo Y37 5G Specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
13எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த விவோ ஒய்37 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ ஒய்37 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் OriginOS 4 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்37 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன்.
டூயல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ ஒய்37 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல இந்த போனின் ஆரம்ப விலை 1,199 yuan (இந்திய மதிப்பில் ரூ.13,839)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








